Tuesday, August 19, 2008

தீண்டுதல்

அலை தீண்ட கரை நுரைத்தது
மழை தீண்ட நிலம் குளிர்ந்தது
வண்டு தீண்ட மலர் சிவந்தது
நிலவு தீண்ட விண்மீன்கள் துடித்தன
உன் விழி தீண்ட எனக்கு கவிதை உதித்தது

பெயரில் பாதி

ஒரு அடையாளத்தின் பொருட்டே பேசுவது என்பது நமக்குள் நடக்கிறது
என் எண்ணத்தின் மறுபக்கமே உன் வார்த்தைகளாய் மிதக்கிறது
உன் பெயரில் நான் பாதியானபின் எனக்கென்று தனியாய் என்ன இருக்கிறது
முகம் தெரியாத என் தோழியே உன்னைப்போல் உன்கவிதையும் ஜொலிக்கிறது

காலை வணக்கம்

மரங்களின் காலை வணக்கம் பூத்துக் குலுங்க
மலர்களின் காலை வணக்கம் மணம் பரப்ப
இரவின் காலை வணக்கம் பகலை எழுப்ப
நிலவின் காலை வணக்கம் சூரியனாய் உதிக்க

மனைவியின் காலை வணக்கம் கணவனை விலக்க
கணவனின் காலை வணக்கம் செய்தியைப் படிக்க
குழந்தையின் காலை வணக்கம் அழுகையில் ஆரம்பிக்க
அன்னையின் காலை வணக்கம் அன்புடன் தொடங்க

குயிலின் காலை வணக்கம் இசையுடன் குழைய
உன்னுடைய காலை வணக்கம் என்னில் உறைய
என்னுடைய காலை வணக்கம் உன் வாசல் சேர
அனுப்புகிறேன் இந்த கவிதையின் மூலமாக